×

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.69.43லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்

பெரம்பலூர்,ஆக.19: பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.69.43 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல் வேறு பகுதிகளில் ரூ69.43 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சித்தலைவர் குன்னம் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில்நேற்று(18ம்தேதி) நடை பெற்றவிழாக்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ9.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மிதிவண்டி நிறுத்தத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். பிறகு எசனை ஊராட்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ. 17.43 லட்சம் மதிப்பீட்டில் கீழக்கரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பால்பண்ணை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தையும், அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.9.50லட்சம் மதிப்பீட்டில் எசனை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள விவசாய சேமிப்பு கிடங்கினையும் அமைச்சர் சா.சி. சிவசங்கர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்பட மேட்டுப்பாளையத்தில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியினையும், வடகரை ஊராட்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி யன் மூலம் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையையும், வெங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பெரம் பலூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ12.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுழைவுவாயில் வளைவு மற்றும் மிதிவண்டி நிறுத் தத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜே ந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, வேப் பந்தட்டை ராமலிங்கம், வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சி கவுன்சி லர்கள் தழுதாழை பாஸ்கர், டாக்டர் கருணாநிதி, ஒன் றிய செயலாளர்கள் ராஜ் குமார், நல்லதம்பி, ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.69.43லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Tags : Perambalur District ,Perambalur ,Transport ,Department ,Minister ,SW ,RC Sivasankar Public ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...